பிக் பாஸ் 9: விறுவிறுப்படையும் போட்டி! இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 90 நாள்களைக் கடந்துள்ளது.
நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியில், சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கமரூதின் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், ஒரே நாளில் பார்வதி மற்றும் கமரூதின் இருவருக்கு ரெட் கார்டு வழங்கபட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கானா வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சுபிக்ஷா, சபரிநாதன், கமருதீன், பார்வதி, சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறக்கூடிய போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் குறைந்த வாக்குகளைப் பெற்று மீனவப் பெண்ணாக அறியப்படும் சுபிக்ஷா வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியை அரோரா வென்று, நேரடியாக கடைசி வாரத்துக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
நிகழ்ச்சி நிறைவடைவதற்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தற்போது, பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




