முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு – சுதந்திர வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தனது உடமைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கான சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அரசால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போது முன்னெடுத்திகுள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குள் அவர் அந்த வதிவிடத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இந்த அரசு இரத்துச் செய்தமையின் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் தெரிவித்துள்ளார்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news

