Tuesday , 4 November 2025

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

புயல் அடுத்த 12 மணிநேரத்தில்

புயல் அடுத்த 12 மணிநேரத்தில்

புயல் அடுத்த 12 மணிநேரத்தில் வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும். புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் …

Read More »

போதைப்பொருட்களை ஒழிக்க

விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் சிவில் சமூகத் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்புக்குக் கிராம மக்களின் ஈடுபாடு மிக அவசியம் எனவும் அவர் இதன்போது அமைச்சர் வலியுறுத்தினார். இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த …

Read More »

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியா

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்ப விசாரணையில் இந்த அச்சுறுத்தல்கள் அத்தகைய தொடர்புகளுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தற்காலிக காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் …

Read More »

லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு: இருவர் கைது!

லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு

லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு: இருவர் கைது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் உள்ள உலகின் அதிகம் பார்வையிடப்படும் லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த நகைகள் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு நேரப்படி இரவு 10 மணியளவில் பாரிஸ்-சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வெளிநாடொன்றுக்கு செல்ல விமானத்தில் ஏறவிருந்த நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இரண்டாவதாக, சிறிது நேரத்திலேயே பாரிஸ் பிராந்தியத்தில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை, …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 27.10.2025 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 27.10.2025 | Sri Lanka Tamil News Home

Read More »

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் 7,944 குடும்பங்களைச் சேர்ந்த 31,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பகுதியளவில் 847 வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Read More »

இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள்

இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள்

இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பேராசிரியர், சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார். பாலியல் தொழிலாளர் பெண்களை சமூகத்தில் ஒதுக்காமல் மற்றும் புறக்கணிக்காமல் ஒருங்கிணைப்பது குறித்து இலங்கையின் முன்னணி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார். பாடசாலைகள் மூலம் பாலியல் கல்வியை மேலும் …

Read More »