யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 24 மற்றும் 25 வயதான நான்கு இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Read More »இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!
குச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ரூபாய் 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து, பிரதேச சபை தலைவரின் தனிப்பட்ட சாரதியும் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Read More »நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன்
நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து செங்கோட்டையனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் செய்திகள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Read More »முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை …
Read More »யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு
யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலை நூலக மேற்கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் என்பவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. அதனை அடுத்து , கூரை பகுதியில் பொலிஸார் மேலதிக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை துப்பாக்கி ஒன்று , இரத்த கறை படிந்த சாறம், வயர்கள், மருந்துகள் , பஞ்சுகள், மருந்து கட்ட பயன்படுத்தப்படும் பன்டேஜ் துணிகள் …
Read More »பாதுகாப்புப் பிரச்சினைகள் – காவல்துறை மா அதிபர்
மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் தடம்புரண்டு விபத்து. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டில் எழுந்துள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக காவல்துறை மா அதிபர் இன்று (31) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இந்தப் விசேட கலந்துரையாடல் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர், பாதுகாப்புக் கோரும் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்துச் சபாநாயகரும் காவல்துறை மா அதிபரும் இணக்கப்பாடு கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் …
Read More »அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது.
அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது. இது தொடர்பாக இன்றைய தினம் போலீஸ் ம அதிபர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அது தவிரவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது ஐரோப்பாவில் இருந்து Zoom மூலம் தொடர்பு கொண்டேன். இதன் போது தற்போதைய நிலையில் ஒரு வைத்தியராக எனக்கு போதை வஸ்து கடத்தல் காரர்கள் மற்றும் பாதாள உலகம் குழுக்களில் இருந்து உயிராபத்து வராது என்பதை தெளிவாக தெரிவித்து இருந்தேன். தற்போதைய நிலையில் எனது உயிருக்கு பங்கம் விளைவிக்க …
Read More »மகளிர் உலகக் கோப்பை
மகளிர் உலகக் கோப்பை 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்தது. நவி மும்பையில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 338 ரன்களை குவித்தது. உலக சாதனை இலக்கான 339 ஐ நோக்கி இந்தியா ஆடியது. நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா எதிர்பாராது அவுட் ஆக, ஜெமிமாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பாக ஆடினர். 89 ரன்களில் கவுர் அவுட் ஆனார். ஆனால் இறுதிவரை 127 …
Read More »இன்று வானிலை எப்படி இருக்கும்?
இன்று வானிலை எப்படி இருக்கும்? தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மிதமான மழை கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை மத்தியகிழக்கு மற்றும் …
Read More »பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் பிகார் – தமிழ்நாடு இடையே பகையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news