உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களை நல்ல மனநிலையுடன் பரீட்சைக்கு தயார்ப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல், டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் …
Read More »21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா
தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடக்கவிருக்கும் பேரணியிலோ அல்லது வேறு எந்த சிங்கள கட்சியின் கூட்டங்களிலோ ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை என அர்ச்சுனா கூறினார்.
Read More »40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இதில் 5 ,267 கிலோகிராம் கேரள கஞ்சா, 839 கிலோகிராம் ஹெரோயின், 2 ,038 கிலோ ஐஸ் மற்றும் 33,000 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 1,683,691 போதை வில்லைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Read More »மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதி முடிவு எட்டப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக, மாகாணசபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்து செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மாகாணசபைத் தேர்தலை …
Read More »கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றிய அரசு! – சஜித் சாடல்
தற்போதைய அரசு முழுக் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்து போயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் இதை விடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் …
Read More »நுகேகொடை பேரணி: முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்கமாட்டார்கள்!
தேசிய மக்கள் சக்தி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார். இதன் …
Read More »“செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியாதீர்!”
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து! உண்மையை வெளிப்படுத்து!!’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ”மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையை உறுதி செய், செம்மணியை மீண்டும் புதைக்க இடம் கொடுக்காதே…! உண்மையை வெளிப்படுத்து!!, அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு” …
Read More »களனி கங்கையில் மூழ்கி இளம் யுவதி மரணம்!
களனி கங்கையில் மூழ்கி பொகவந்தலாவையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த மூன்று யுவதிகளும் இரண்டு இளைஞர்களும் நேற்று மாலை கொஹிலவத்த பகுதியில் களனி ஆற்றங்கரைக்கு ஓட்டோவில் சென்றனர். ஓட்டோவின் உரிமையாளரான இளைஞர் ஒருவர் களனி ஆற்றங்கரையில் ஓட்டோவை நிறுத்திச் சுத்தம் செய்தார். அந்த நேரத்தில், மேற்படி யுவதிகளில் ஒருவரான அந்த இளைஞரின் காதலியும் தண்ணீரில் இறங்க முயன்றபோது, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரில் …
Read More »உயர்தர பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 10ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் …
Read More »புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி மற்றும் வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுக்கள் 85 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இப்பணிகள் நீண்டநாட்களாக முடிவுறாத நிலையில் உள்ளதால், விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சித்தாறு அணைக்கட்டு தற்போது ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ளது. சிவசாமி அணைக்கட்டில் கதவு பொருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில் காணப்படுகிறது; வீரசிங்கம் அணைக்கட்டின் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news