களனி கங்கையில் மூழ்கி பொகவந்தலாவையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த மூன்று யுவதிகளும் இரண்டு இளைஞர்களும் நேற்று மாலை கொஹிலவத்த பகுதியில் களனி ஆற்றங்கரைக்கு ஓட்டோவில் சென்றனர். ஓட்டோவின் உரிமையாளரான இளைஞர் ஒருவர் களனி ஆற்றங்கரையில் ஓட்டோவை நிறுத்திச் சுத்தம் செய்தார். அந்த நேரத்தில், மேற்படி யுவதிகளில் ஒருவரான அந்த இளைஞரின் காதலியும் தண்ணீரில் இறங்க முயன்றபோது, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரில் …
Read More »உயர்தர பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 10ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் …
Read More »இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்று (02.11.2025 – ஞாயிற்றுக்கிழமை ) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News
Read More »மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய்
மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய் வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜயின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இந்தக் குழு விஜயின் நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதுடன், …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 02.11.2025
Read More »இன்றைய ராசிப்பலன் – 02.11.2025
இன்றைய ராசிப்பலன் – 02.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 02-11-2025, ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.32 வரை பின்பு துவாதசி திதி பின்இரவு 05.07 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.03 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் மாலை 05.03 வரை பின்பு அமிர்தயோகம். ஏகாதசி விரதம். (திருக்கணிதம்) பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் …
Read More »அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம்
அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தனது அரச குடும்ப பட்டங்கள் அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் வசித்து வந்த ராயல் லாட்ஜ் மாளிகையிலிருந்தும் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் வெளியேற்றியுள்ளார். இந்த நடவடிக்கைகளின் மூலம், ஆண்ட்ரூ இனி “இளவரசர் ஆண்ட்ரூ” என்று அறியப்படாமல், “ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் விண்ட்சர்” என அழைக்கப்படுவார். அவர் தனது “ட்யூக் ஆஃப் …
Read More »புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி மற்றும் வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுக்கள் 85 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இப்பணிகள் நீண்டநாட்களாக முடிவுறாத நிலையில் உள்ளதால், விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சித்தாறு அணைக்கட்டு தற்போது ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ளது. சிவசாமி அணைக்கட்டில் கதவு பொருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில் காணப்படுகிறது; வீரசிங்கம் அணைக்கட்டின் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், …
Read More »Bigg Boss 9: மெகா போனுடன் வந்த விஜய் சேதுபதி…
பிக் பாஸ் சீசன் 9 இன் 27ஆம் நாள் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்று வருகிறது. சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, கையில் மெகாபோனை பிடித்து போட்டியாளர்களை நேரடியாக எதிர்நோக்கி பேசினார். “எல்லோரும் நல்லா இருக்கிங்களா? கத்துக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது? உங்களுக்கு தெரியவேணாமா? பேசுனா புரியுமா? இல்ல உங்கள மாதிரி கத்துனா தான் புரியுமா? என போட்டியாளர்களின் பாணியிலேயே கத்தினார். மேலும் பார்வதியை பார்த்து “நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் …
Read More »இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ முடிவு?
இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ முடிவு? மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்.30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news