Wednesday , 5 November 2025

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று

இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை! சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள வானிலை மையம், இது வடக்கு- வடமேற்கு …

Read More »

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

பிரதமர்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழகத்தில் வந்து பேசுவதற்கு முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். எத்தனை அவதூறுகளை நமது மீது பரப்பினாலும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். தி.மு.க எம்பி ஆ.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சேலம் சென்றடைந்தார். அதன் பின்னர் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு சென்ற …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 03.11.2025 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள்

இலங்கையின் முக்கிய செய்திகள் – 03.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 03.10.2025

Read More »

இன்றைய ராசிப்பலன் – 03.10.2025

இன்றைய ராசிப்பலன் - 03.10.2025

இன்றைய ராசிப்பலன் – 03.10.2025 இன்றைய பஞ்சாங்கம் 03-11-2025, ஐப்பசி 17, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 03.05 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். ஸோம பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு …

Read More »

21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா

21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா

தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடக்கவிருக்கும் பேரணியிலோ அல்லது வேறு எந்த சிங்கள கட்சியின் கூட்டங்களிலோ ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை என அர்ச்சுனா கூறினார்.

Read More »

40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இதில் 5 ,267 கிலோகிராம் கேரள கஞ்சா, 839 கிலோகிராம் ஹெரோயின், 2 ,038 கிலோ ஐஸ் மற்றும் 33,000 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 1,683,691 போதை வில்லைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Read More »

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதி முடிவு எட்டப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக, மாகாணசபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்து செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மாகாணசபைத் தேர்தலை …

Read More »

கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றிய அரசு! – சஜித் சாடல்

தற்போதைய அரசு முழுக் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்து போயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் இதை விடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் …

Read More »

நுகேகொடை பேரணி: முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்கமாட்டார்கள்!

தேசிய மக்கள் சக்தி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டார்கள். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார். இதன் …

Read More »

“செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியாதீர்!”

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து! உண்மையை வெளிப்படுத்து!!’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ”மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையை உறுதி செய், செம்மணியை மீண்டும் புதைக்க இடம் கொடுக்காதே…! உண்மையை வெளிப்படுத்து!!, அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு” …

Read More »