Saturday , 1 November 2025

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விவசாயத்தைப் பற்றி தெரியாத புதிய கட்சியினர் நெல் கொள்முதல் நிலையத்தை பற்றி அறிக்கை மற்றும் பேட்டி கொடுக்கிறார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். தொடர்மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல திமுக ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் …

Read More »

தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம் தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தவெக தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. …

Read More »

புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை

புதிய நேர

புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும், புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலை புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய …

Read More »

மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி

மீண்டும் வெடித்த போர் - 33 பாலஸ்தீனியர்கள் பலி

மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “சக்திவாய்ந்த தாக்குதல்களை” நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 29.10.2025

இலங்கையின் முக்கிய செய்திகள் - 29.10.2025

இலங்கையின் முக்கிய செய்திகள் – 29.10.2025 | Sri Lanka Tamil News பெற்ற தாயைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த மகன்!

Read More »

பெற்ற தாயைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த மகன்!

வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம், மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. மதவாச்சி பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண் அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அந்த மகன், தாயைக் கோடரியால் தலையில் தாக்கிக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கொலைக்கான …

Read More »

தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி.

தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி

தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி. “இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த அரசும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுகின்றது.” – இவ்வாறு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இம்முறை இடம்பெற்ற …

Read More »

ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போர் தொடுப்போம் – கவாஜா ஆசிப்

ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் அதன் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. அதன்படி, தோஹாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டு கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே 2 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் …

Read More »

செவ்வந்திக்கு உதவி புரிந்தமை – 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில்

செவ்வந்திக்கு உதவி புரிந்தமை – 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக 04 குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன. அத்துடன், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 28.10.2025

இலங்கையின் முக்கிய செய்திகள் – 28.10.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 28.10.2025

Read More »