புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும், புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலை புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய …
Read More »பெற்ற தாயைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த மகன்!
வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம், மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. மதவாச்சி பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண் அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அந்த மகன், தாயைக் கோடரியால் தலையில் தாக்கிக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கொலைக்கான …
Read More »தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி.
தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி. “இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த அரசும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுகின்றது.” – இவ்வாறு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இம்முறை இடம்பெற்ற …
Read More »செவ்வந்திக்கு உதவி புரிந்தமை – 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில்
செவ்வந்திக்கு உதவி புரிந்தமை – 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக 04 குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன. அத்துடன், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் …
Read More »சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம்
சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், இது தனித்துவமான கலாசார பாரம்பரியத்தை கொண்ட இடமாக அமைந்துள்ளமையினால், உலகளாவிய ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை …
Read More »போதைப்பொருட்களை ஒழிக்க
போதைப்பொருட்களை ஒழிக்க போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் சிவில் சமூகத் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்புக்குக் கிராம மக்களின் ஈடுபாடு மிக அவசியம் எனவும் அவர் இதன்போது அமைச்சர் வலியுறுத்தினார். இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த …
Read More »நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்ப விசாரணையில் இந்த அச்சுறுத்தல்கள் அத்தகைய தொடர்புகளுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தற்காலிக காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் …
Read More »நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் 7,944 குடும்பங்களைச் சேர்ந்த 31,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பகுதியளவில் 847 வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் 80,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள்
Read More »இலங்கையில் 80,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள்
இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பேராசிரியர், சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார். பாலியல் தொழிலாளர் பெண்களை சமூகத்தில் ஒதுக்காமல் மற்றும் புறக்கணிக்காமல் ஒருங்கிணைப்பது குறித்து இலங்கையின் முன்னணி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார். பாடசாலைகள் மூலம் பாலியல் கல்வியை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் …
Read More »
Tamilnewsstar Just another WordPress site
