பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக்கூறி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால், அவரது கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், உறுப்பினராக தொடர்ந்தார். இதனிடையே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் …
Read More »நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன்
நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து செங்கோட்டையனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் செய்திகள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Read More »முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை …
Read More »இன்று வானிலை எப்படி இருக்கும்?
இன்று வானிலை எப்படி இருக்கும்? தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மிதமான மழை கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை மத்தியகிழக்கு மற்றும் …
Read More »பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் பிகார் – தமிழ்நாடு இடையே பகையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் …
Read More »தமிழகத்தில் மழை தொடருமா?
தமிழகத்தில் மழை தொடருமா? தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருக்கும் என்று கணித்துள்ளது. மத்திய மேற்குவங்கக் கடலில் நிலவிய மொந்தா புயல், ஆந்திராவில கரையை கடந்து தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோன்று, வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான …
Read More »தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (28-10-2025) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” தீவிரப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா – யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு கரையை கடந்து, இன்று (29-10-2025) அதிகாலை, புயலாக வலுக்குறைந்து, …
Read More »விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விவசாயத்தைப் பற்றி தெரியாத புதிய கட்சியினர் நெல் கொள்முதல் நிலையத்தை பற்றி அறிக்கை மற்றும் பேட்டி கொடுக்கிறார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். தொடர்மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல திமுக ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் …
Read More »தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்
தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம் தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தவெக தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. …
Read More »புயல் அடுத்த 12 மணிநேரத்தில்
புயல் அடுத்த 12 மணிநேரத்தில் வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும். புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news