Saturday , 1 November 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

வீட்டுக்குள் அத்துமீறி வெறியாட்டம்! – ஐவர் கைது

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களைத் தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது. களுத்துறையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்திப் பலமாகத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் களுத்துறை பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய ஏனைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் …

Read More »

அரச இல்லத்திலிருந்து சந்திரிகா வெளியேற்றம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு – சுதந்திர வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தனது உடமைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கான சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அரசால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போது முன்னெடுத்திகுள்ளார். அடுத்த சில நாட்களுக்குள் அவர் அந்த வதிவிடத்திலிருந்து …

Read More »

முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் – எஸ்.எம்.மரிக்கார்!

முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் - எஸ்.எம்.மரிக்கார்!

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார். இரு கட்சிகளும் இணையாமல் என்னிடம் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்க மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு வரி குறைப்பினை …

Read More »

மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது – சாகர காரியவசம்!

மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது - சாகர காரியவசம்!

ஆட்சிக்கு வந்து ஒருவருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றதைத் …

Read More »

“முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யோம்!”

"முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யோம்!"

“வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது என நாங்கள் சொல்லியிருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் …

Read More »

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!

யாழில்

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More »

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 24 மற்றும் 25 வயதான நான்கு இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More »

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!

குச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ரூபாய் 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து, பிரதேச சபை தலைவரின் தனிப்பட்ட சாரதியும் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Read More »

யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு

யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி - மீட்பு

யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலை நூலக மேற்கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் என்பவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. அதனை அடுத்து , கூரை பகுதியில் பொலிஸார் மேலதிக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை துப்பாக்கி ஒன்று , இரத்த கறை படிந்த சாறம், வயர்கள், மருந்துகள் , பஞ்சுகள், மருந்து கட்ட பயன்படுத்தப்படும் பன்டேஜ் துணிகள் …

Read More »

பாதுகாப்புப் பிரச்சினைகள் – காவல்துறை மா அதிபர்

பாதுகாப்புப் பிரச்சினைகள்

மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் தடம்புரண்டு விபத்து. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டில் எழுந்துள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக காவல்துறை மா அதிபர் இன்று (31) நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இந்தப் விசேட கலந்துரையாடல் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர், பாதுகாப்புக் கோரும் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்துச் சபாநாயகரும் காவல்துறை மா அதிபரும் இணக்கப்பாடு கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் …

Read More »