Sunday , 2 November 2025
இந்திய அணி

இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ முடிவு?

Spread the love

இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ முடிவு?

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்.30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி – தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை (நவ.2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

லூவர் கொள்ளை : ஏழு சந்தேக நபர்களில் ஒருவர் விடுவிப்பு!