கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
10ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 8ஆம் திகதி மீள பாடசாலைகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். அன்றுடன் இவ்வாண்டுக்கான சகல தவணைகளும் நிறைவடைவதோடு, டிசம்பர் 31ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news