Wednesday , 29 October 2025

பெற்ற தாயைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த மகன்!

Spread the love

வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம், மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண் அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அந்த மகன், தாயைக் கோடரியால் தலையில் தாக்கிக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சந்தேகநபரைக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆரம்பகட்ட நீதிவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக வேண்டி சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

Spread the loveதொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம் தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் …