இலங்கை செய்திகள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் மீண்டும் நாட்டுக்கு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் மீண்டும் நாட்டுக்கு!
துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவரும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலை மின் நிலையம் திறந்து வைப்பு




