நோபல் பதக்கத்தை ஒப்படைத்த வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்

நோபல் பதக்கத்தை ஒப்படைத்த வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போதே, இந்த பதக்கத்தை ஜனாதிபதி ட்ரம்பிடம் தான் ஒப்படைத்ததாக மச்சாடோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், மச்சாடோ வழங்கிய அந்தப் பதக்கத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டாரா அல்லது இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல்களை அவர் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நோபல் பரிசு பெற்ற ஒருவர், அதனை மற்றுமொருவருக்கு பரிசளிக்க முடியாது என்று நோபல் குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலை வேளையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவதானம்




