பிக் பாஸ் 9: சான்ட்ரா காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கமரூதின்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சான்ட்ராவை கீழே தள்ளிவிட்ட கமரூதின், சான்ட்ராவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியில், சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கமரூதின் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் வரம்பைமீறி பேசிக்கொண்டதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கீழே விழுந்த சான்ட்ராவுக்கு அதீத பயம்(panic attack) ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, சில மணிநேரத்துக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
சான்ட்ராவை தள்ளிவிட்ட பார்வதி மற்றும் கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் போட்டியாளர்கள், ரசிகர்கள் பலரும் சமூக ஊடங்களில் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, பார்வதி மற்றும் கமரூதின் ஆகிய இருவருக்கு ரெட் கார்டு வழங்கி போட்டியைவிட்டு வெளியே அனுப்பினார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.
இதனிடையே பார்வதி சான்ட்ராவிடம், “என் வாழ்நாளில் மன்னிக்க முடியாத பெரிய தவறை செய்துவிட்டேன். என் தவறை நியாயப்படுத்தவில்லை, தவறு செய்ததற்கான தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் என்னை மன்னிவித்து விடு” என்று கூறினார்.
அதேபோல, கமரூதினும் சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தார். இருவரிடமும் ஏதும்பேசாமல் அழுதுக்கொண்டே விலகினார் சான்ட்ரா.
முந்தைய சீசன்களில் மஹத், பிரதீப், சரவணன் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.




