பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை தொகுப்பாக வழங்க, தமிழ்நாடு அரசு 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் பயனாளிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில், பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து முறையான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3,000 ரொக்க பணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் எட்டாம் தேதி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த உடன் தமிழக முழுவதும் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் பச்சரிசி சர்க்கரை கரும்புடன் மூன்றாயிரம் ரொக்க பணம் வழங்கும் பணி தொடங்கும்.
ஒவ்வொரு நாளும் சுமார் நானூறு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 3,000 ரொக்க பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 14 ஆம் தேதிக்குள் ரூ 3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை முழுமையாக வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை




