”பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள்” – செங்கோட்டையன்

”பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள்” – செங்கோட்டையன்
பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும் தவெக தலைவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களை கூட்டணியில் வாழ்த்தி வரவேற்போம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தவெக கட்சி அலுவலகத்தில் தவெக தலைமை நிர்வாககுழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியார் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வீரமங்கை வேலு நாச்சியாரின் 296 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறோம். தலைவரின் கட்டளையின்படி மலர் தூவி மரியாதை செலுத்தினோம். வரலாற்று சொந்தக்காரர், தேசிய தலைவர்களில் ஒருவர் என இப்படிப்பட்டவர்களை தான் நாம் நமது கொள்கை தலைவர்களாக வைத்துள்ளோம்.
சத்தியமங்கலத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளேன். நமது கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலக நாடுகளில் தலைசிறந்த தலைவராக தவெக தலைவர் விஜய் உள்ளார். மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார்.
எல்லோருக்கும் மாற்றங்கள் வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கிறோம். நேற்றைய முந்தினம் 1 ஜனவரி பிறந்துள்ளது. இந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெறும்.
தவெக விருப்புமனு வழங்குவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார். எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அது நிறைவேற்றாததால் போராட்டம் நடைபெறுகிறது.
பொங்கல் வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள். தலைவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களை கூட்டணியில் வாழ்த்தி வரவேற்போம்.
விரைவில் யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை பாருங்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு குறித்து தற்போது சொல்ல முடியாது. இரண்டு கட்சிகளும் தவெகவை தாக்குகின்றனர். காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும் என்றும் தெரிவித்தார்.
தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் நேற்று தவெகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் ஏற்பட்ட சிக்கலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவாளராக ஜே.சி.டி. பிரபாகர் இருந்து வந்தார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்




