குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்
குளிர்கால மாதங்களில் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் பருவகால மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதே முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் அதிகரித்து வரும் நிலையில், இருமல், சளி, செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல் சோர்வு போன்ற பருவகால உடல்நலப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. குளிர்கால மாதங்களில் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் மற்றும் உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் பருவகால மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதே முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் தீபிகா ஜெயின் கூறியதாவது, குளிர்காலங்களில் உன்னால் தினசரி உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய 5 உணவுகளை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பட்டியலிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த பருவகால உணவுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்திற்கு உதவும் மற்றும் குளிர்காலம் முழுவதும் உடலை ஆற்றலுடன் வைத்திருக்கும் என்பதை பற்றி ஜெயின் விளக்கமளித்துள்ளார். குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை கதகதப்பாக வைத்திருக்கவும் சில உணவுகள் நமக்குத் தேவைப்படுகின்றன. மேலும் இந்த 5 உணவுகள் அந்த வேலையை சரியாகச் செய்கின்றன, என்று ஜெயின் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
1. நெல்லிக்காய்:ஜெயின் பரிந்துரைக்கும் பட்டியலில் உள்ள முதல் சிறந்த உணவு நெல்லிக்காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இருமல் மற்றும் சளி போன்ற பருவகால நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது என்று கூறியுள்ளார். பொதுவாக குளிர்காலத்தில், நெல்லிக்காயை பச்சையாகவோ, ஜூஸ் ஆகவோ அல்லது துவையல் செய்தோ எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2. பொங்க் / ஹுர்டா:ஜெயின் பரிந்துரைக்கும் இரண்டாவது உணவு ‘பொங்க்’ ஆகும். இது தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு குளிர்காலக் காய்கறி என்று கூறியுள்ளார். ஜெயினின் கூற்றுப்படி, பொங்கில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது குளிர்காலத்தில் ஏற்படும் மந்தநிலையை போக்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும், நீண்ட நேர ஆற்றலுக்கும் உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.
3. கொய்யா:ஜெயினின் பட்டியலில் உள்ள மூன்றாவது சிறந்த உணவு கொய்யா ஆகும். நெல்லிக்காயைப் போலவே, கொய்யாவிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தண்ணீர் குடிப்பது மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை குறைவாக இருக்கும் குளிர்காலத்தில், பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலை போக்க கொய்யா உதவுகிறது என்றும் ஜெயின் குறிப்பிடுகிறார். கொய்யாவை ஜூஸ் செய்து குடிப்பதை விட, முழு பழமாகச் சாப்பிடும்போதுதான் அதன் நார்ச்சத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.
4. கம்பு:நான்காவதாக, பல இந்தியக் குடும்பங்களில் குளிர்கால உணவாகப் பயன்படுத்தப்படும் கம்பு குறித்து ஜெயின் சிறப்பித்துக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, கம்பானது வெப்பமூட்டும் விளைவைக் கொண்டுள்ளது, எனவே இது இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது என்றும் அவர் விளக்குகிறார்.
5. ஸ்ட்ராபெர்ரி:ஜெயினின் பட்டியலில் உள்ள கடைசியான குளிர்காலச் சிறப்பு உணவு ஸ்ட்ராபெர்ரி ஆகும். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பண்புகள், உடலின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸை எதிர்த்துப் போராட உதவுகின்றன என்று அவர் கூறியுள்ளார். எனவே இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“எம்.ஜி.ஆரின் பெயரை மறைக்க திமுக அரசு முயற்சி..” எடப்பாடி பழனிசாமி




