டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…?

டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…?
டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறை ஓர் புலனாய்வு அலசல்.
சிங்கள அரசு தமிழ் மக்களை இனவழிப்பு செய்து கபடத்தனமாக சர்வதேசத்திடம் இருந்து தப்பி வருகின்றது அது பல வழிகளிலும் பல இலங்கை ஆதரவு நாடுகளின் அனுசரணையுடனும் தப்பித்து வருகின்றது.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை அரசின் எடுபிடிகளான டக்ளஸ் மறறும் பிள்ளையான் ஆகியோரின் கைதுகள் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் தமிழ் இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து இலங்கை ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையிலேயே நகர்த்தப்படுகின்றது.
சிங்கள ஆட்சியாளர்களின் இனவழிப்பை சர்வதேச தலையீட்டுடன் ஒரு விசாரணையை கோருவதே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என்று எதிர் பார்க்கப்படும் வேளையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் சூழ்ச்சியும் இலங்கை சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் கபட தனமான திட்டத்தாலும் நடைமுறை படுத்தப்படும் திட்டமே உள்ளகப் பொறிமுறையாகும்.
இந்த உள்ளகப் பொறிமுறையினால் தமிழ் மக்களின் இனவழிப்புக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை வளமைபோல குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது அந்த வகையில் டக்ளஸ் மற்றும் பிள்ளையான் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஆகவேதான் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பான சர்வதேச விசாரணையை டக்ளஸ் தேவானந்தா பிள்ளையானுக்கும் மேற்கொண்டால் இவர்களின் பின்னால் இருக்கும் இனவழிப்பாளர்களையும் கண்டுபிடித்து கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க முடியுமே தவிர உள்ளகப் பொறிமுறை என்பது வெறும் கண்துடைப்பே ஆகும்
அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி




