தமிழ்நாடு செய்திகள்
குடிசைகள் இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சரின் கனவு – அமைச்சர் சக்கரபாணி

குடிசைகள் இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சரின் கனவு – அமைச்சர் சக்கரபாணி
உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பொருளுர் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி, பாலப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலப்பன்பட்டி புதூர் மற்றும் வேலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சண்முகவலசு உள்ளிட்ட பகுதிகளில் 3 பகுதி நேர நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குடிமைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்றார்.
மாணவர்களின் ஆரோக்கியம் ஆபத்தில்?




