பிக்பாஸ் 9 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்!

பிக்பாஸ் 9 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்!
பிக்பாஸ் சீசன் 9. இந்த நிகழ்ச்சியில் வாரா வாரம் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறுவது வழக்கம். சில வாரங்களில் டபுள் எவிக்ஷனும் நடக்கும்.
அப்படி இந்த வாரம், 2 பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ் 9. இந்த நிகழ்ச்சியில் நாம் தினசரி யூடியுப் மற்றும் சீரியல்களில் பார்த்த முகங்களாக இருக்கும் பலர் போட்டியாளர்களாக நுழைந்தனர்.
பிக்பாஸ் சீசன் 9-ஐ பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்து பிரபலமான மற்றும் எத்தனை முறை எவிக்ஷனிற்கு சென்றாலும் நிலைத்து நிற்கும் போட்டியாளராக இருக்கிறார் பார்வது. விஜே-வான இவர், பல நேர்காணல்கள் மூலம் பிரபலம் ஆனவர். பிக்பாஸ் 9 நிகழ்ச்சியிலும் பலமான போட்டியாளராக விளங்குகிறார். இந்த வாரத்திற்கான ப்ரமோவிலும் இவர்தான் கண்டெண்டாக இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டப்போகிறது. இதையடுத்து, ஸ்ட்ராங் ஆன போட்டியாளர்களாக கருதப்பட்ட பலர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற, இப்போது இந்த வாரம் யார் எவிக்ட் ஆகப்போவது எனும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அது குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம், டபுள் எவிக்ஷன் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இரண்டு பேர் யார் என்பது குறித்த விவரமும் X தளத்தில் பரவி வருகிறது.
இந்த வாரம் முதலாவதாக வெளியேற்றப்பட்டதாக பலரும் கூறும் நபர், அமித்தான். சீரியல் நடிகரான இவர், பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தார். வந்ததில் இருந்து பிறருடன் சேர்ந்து காசிப் பேசினாரே தவிர, தனியாக தெரியும் அளவிற்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்தது. இதையடுத்து இந்த வாரத்தில் வாக்குகள் குறைவாக பெற்றிருப்பதால் இவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இரண்டாவதாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அனைவரும் கூறும் பெயர், கனி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் அடித்து வென்ற இவர், பிக்பாஸில் வலுவான போட்டியாளராக இருக்கிறார். இருப்பினும் இவர்கள் இருவரும் வெளியேற்றப்பட்டது குறித்த எந்த தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சுபிக்ஷாவும் டேஞ்சர் சோனில்தான் இருக்கிறாராம். எக்ஸ் தளத்தில் ஒரு தரப்பினர் இவரும் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் இதுவும் இன்னும் உறுதிப்படுத்ஹ்டப்படவில்லை. எபிசொட் டெலிகாஸ்ட் ஆனால் மட்டுமே யார் எவிக்ட் ஆனார்கள் என்பது குறித்த முழு தகவல் வெளியாகும்.
நீங்கள் வசிக்கும் பகுதி பாதுகாப்பானதா?




