இலங்கை செய்திகள்

உலக வங்கி நிதியுதவி!

Spread the love

உலக வங்கி நிதியுதவி!

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ஊக்குசிப்பதோடு, அரசாங்க சேவைகளை நவீனமயப்படுத்தவும், மக்கள் மற்றும் வணிகங்கள் அவற்றை இலகுவாகவும் வினைத்திறனாகவும் அணுகுவதற்கும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஊடாக அரசாங்க சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையத்தள உருவாக்கம், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான வசதி மற்றும் தேவைக்கேற்ப விரிவாக்கக்கூடிய நவீன தரவுத் தளம் போன்ற வசதிகள் உருவாகும்.

அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button