இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை
டிட்வா சூறாவளி தொடர்பில் இந்திய காலநிலை திணைக்களம், இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
எனினும், இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக தெளிவுபடுத்தலை அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிட்வா சூறாவளி தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எனினும், சூறாவளி குறித்து உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கோ அல்லது அரச நிறுவனங்களுக்கோ ஏதேனும் அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருக்குமாயின் அதனை வெளிப்படுத்துமாறு பகிரங்கமாகக் கோருவதாகவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில்,கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிராந்திய காலநிலை விசேட மத்திய நிலையம் சாதாரண வானிலை அறிக்கையை மட்டுமே வெளியிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?




