இலங்கை செய்திகள்

மலையக மக்களை வரவேற்க வடக்கு, கிழக்கு தயார்: சுமந்திரன்

Spread the love

மலையக மக்களை வரவேற்க வடக்கு, கிழக்கு தயார்: சுமந்திரன்
வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் பதிவொன்றை இட்டுள்ள அவர், இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில்,

கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.

இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அவர்களுடைய பதிவை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ளார்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button