ஜேர்மனியில் மன விரக்தியால் யாழ். இளைஞர் முகாமில் உயிர்மாய்ப்பு!

ஜேர்மனியில் மன விரக்தியால் யாழ். இளைஞர் முகாமில் உயிர்மாய்ப்பு!
ஊரேழு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் புஸ்பராசா சுகன், இரண்டு வருடங்களுக்கு முன் ஜெர்மனி சென்று அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தி அநேகரை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
விசா இன்மை, வேலை இன்மை, மொழிப் பிரச்சனை, நண்பர்கள் இல்லாமை மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் அவர் கடுமையான தனிமை உணர்வில் சிக்கியிருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
“தான் மீண்டும் ஊருக்கு திரும்பி விடுவேன்” என்று அடிக்கடி கூறிய அவருக்கு குடும்பம் ஆறுதல் கூறிய போதிலும், மனவலிமை குறைந்த நிலையில் இந்த துயரம் நடைபெற்றுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
✨ வெளிநாடு செல்லும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு
🌍 வெளிநாட்டுப் பயணம் என்பது கனவுகளும் சவால்களும் கலந்த ஒரு பயணம்.
வேலை, மொழி, கலாசாரம், தனிமை, ஆவண பிரச்சனைகள் போன்றவை பலரையும் மன அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன.
முக்கியமாக—தனிமையில் போராடும் போது பேசிக் கொள்ள யாராவது தேவை.வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவுகள் –
தயவுசெய்து ஒருவரையொருவர் தொடர்பில் இருங்கள்.
சிறிய ஒரு குரல் அழைப்பும், ஒரு ஆறுதல் வார்த்தையும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.
வெளிநாடு செல்ல நினைக்கும் இளைஞர்களுக்கு –உங்களின் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை உண்டு. ஆதரவு அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக பல கனவுகளை சுமந்து கோடிக்கணக்கில் கொட்டி அங்கு போய் McDonald’s, தமிழ்க்கடைகளில் விசா இன்றி குறைந்த சம்பளத்திற்கு கடுமையாக வேலை செய்து “குருவி தலைப் பனங்காயாக” எதிர்காலத்தை நினைத்தவுடன் வரும் ஏமாற்றம் தான் இந்த முடிவுக்கு இட்டுச் செல்கிறது.
தயவுசெய்து கொஞ்சம் சிந்தியுங்கள் படித்த பத்து இளைஞர்கள் சேர்ந்து முதலிட்டு கிடாய் வளர்ப்பு, கோழி வளர்ப்பு ,பன்றி வளர்ப்பு என்று யோசித்தால் கூட இதெல்லாம் முடிவுக்கு வரும்.சாகத் துணிபவனுக்கு வாழ்தல் அத்தனை கடினமா?
படத்தில் பார்க்கும் போதே எங்களுக்கே மனதில் இனம்புரியாத கவலை ஆட்கொள்கிறதே பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்?
இளைஞர்கள் மத்தியில் மனநலம் உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக மாறுகிற ஒரு விடயம்.
🕯️ புஸ்பராசா சுகன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மோ.கோகுலன்.
நடைபெறவிருந்த மரியா கொரினா மச்சாடோவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து




