சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல்

சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல்
சூடானில் பாடசாலை மற்றும் மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடானில் அந்நாட்டு இராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ் (Rapid Support Forces) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலை, மருத்துவமனை மீது ஆயுத குழுவான ரேபிட் சப்போர்ட் போர்சஸ், நேற்று இரவு ஆளில்லா விமானங்களை ஏவியது.
ஆயுத குழுவினர், முதலில் குழந்தைகள் பாடசாலையைத் தாக்கியது.
பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி கோரி கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட, 50 பேர் கொல்லப்பட்டனர் என, சூடான் மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!




