மீண்டும் மழை

மீண்டும் மழை
நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அந்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மில்லிமீற்றர் அல்லது 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா




