அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா
அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அந்த வாகனம் எனக்கு தேவையில்லை. மக்கள் பரிதவிக்கும் போது வாகனம் எதற்கு? எனது வாகனத்துக்குரிய பணத்தை மலையக மக்களுக்கு வழங்கவும். வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை கொண்டுவருவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என்று அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. தனது உரையின்போது ஆளுங்கட்சியினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சிங்கள மொழியில் கடும் வசனங்களையும் பயன்படுத்தியுள்ளார்.
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை!




