உலக செய்திகள்

கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love

ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், மீட்புப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

’கொம்புசீவி’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button