திமுக – தவெக இடையே போட்டி

திமுக – தவெக இடையே போட்டி
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று ஈரோடு, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குட்டப்பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அங்கு, சிப்காட் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், 2026-ல் தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “நாளை கூட கட்சி ஆரம்பித்து நான் தான் முதல்வர் என ஜனநாயக நாட்டில் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதில் தவறில்லை” என்றார்.
தொடர்ந்து, திமுக- தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, “தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. இந்த மாதிரி சூழ்நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்து எங்களுக்கு போட்டி என்றால் விந்தையிலும் விந்தை.
சேலத்தில் 55 சாயப்பட்டறைகளுக்கு அனுமதி தரக்கூடாது. பெருந்துறை சிப்காட்டில் 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை காலதாமதமின்றி உடனே தொடங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
திருமதி. குமாரசுவாமி இரத்தினம்




