Wednesday , 5 November 2025
ராஜமவுலி

ராஜமவுலி – மகேஷ் பாபு பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா..?

Spread the love

ராஜமவுலி – மகேஷ் பாபு பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா..?

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்தின் டைட்டில், யார் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்கள் என எதுவும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்க இருக்கிறது. பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதால், ஃபர்ஸ்ட் லுக்கும் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

ராஜமவுலி – மகேஷ் பாபு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் இந்நிகழ்வில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். அன்றைய தினமே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

சிறீதரன் எம்.பியின் சாரதி திடீரென கைது