Wednesday , 5 November 2025
வவுனியாவில் இளம் குடும்ப பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை!

வவுனியாவில் இளம் குடும்ப பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை!

Spread the love

வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (04.11) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இ.சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

பண்டிவிருச்சான்

பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள்

Spread the loveபண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை …