பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள்
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் நவம்பர் 27ம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவு நிகழ்வுக்காக தயாராக ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதானப் பணியில் முன்னால் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலுமில்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இலங்கையின் முக்கிய செய்திகள் – 04.11.2025 | Sri Lanka Tamil News
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news