பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழகத்தில் வந்து பேசுவதற்கு முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். எத்தனை அவதூறுகளை நமது மீது பரப்பினாலும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்பி ஆ.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சேலம் சென்றடைந்தார். அதன் பின்னர் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர் என்ற தீய செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதை தடுப்பதற்கான முயற்சியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதை தான் பீகார் மாநிலத்தில் மேற்கொண்டனர்.
இலங்கையின் முக்கிய செய்திகள் – 03.11.2025 | Sri Lanka Tamil News
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news