நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதில் 5 ,267 கிலோகிராம் கேரள கஞ்சா, 839 கிலோகிராம் ஹெரோயின், 2 ,038 கிலோ ஐஸ் மற்றும் 33,000 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், 1,683,691 போதை வில்லைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news