மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய்
வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜயின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இந்தக் குழு விஜயின் நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதுடன், தவெக தொண்டர் படைக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க இருக்கிறது.
பிரசார பாதுகாப்பிற்காக, ஒரு தொகுதிக்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என தலா இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட தொண்டரணியினருக்கு இன்று காலை 9 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொண்டரணியினருக்கு, தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பயிற்சி வழங்க இருக்கின்றனர்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இன்னும் 10 நாட்களில் மீண்டும் தொடங்க இருக்கிறது.
வருகிற 5-ஆம் தேதி தவெக பொதுக்குழுக் கூட்டம் முடிவடைந்ததும், சுற்றுப்பயணத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித தடையூறுகளும் இல்லாமல், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதமின்றி பிரசாரம் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news