பிக் பாஸ் சீசன் 9 இன் 27ஆம் நாள் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்று வருகிறது.
சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, கையில் மெகாபோனை பிடித்து போட்டியாளர்களை நேரடியாக எதிர்நோக்கி பேசினார்.
“எல்லோரும் நல்லா இருக்கிங்களா? கத்துக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது? உங்களுக்கு தெரியவேணாமா? பேசுனா புரியுமா? இல்ல உங்கள மாதிரி கத்துனா தான் புரியுமா? என போட்டியாளர்களின் பாணியிலேயே கத்தினார்.
மேலும் பார்வதியை பார்த்து “நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் நீங்கள் அவர்களை பேச விடுவதில்லை” என்று கூறுகிறார் அடுத்தபடியாக திவாகரிடம் “நீங்க கத்துறீங்க கத்துறீங்க கத்துக்கிட்டே தான் இருக்கீங்க” என்று கூறுகிறார். மேலும் தராதரத்தை பற்றி நீங்கள் யார் பேசுவதற்கு என்றும் விமர்சிக்கிறார்.
அடுத்தபடியாக பிரவீன் இடம் திவாகர் சட்டை இல்லாமல் ரீல்ஸ் பண்ணுவதை பற்றி பேசினானர். அப்போது பிரவீன் சிறு குழந்தைகள் பார்ப்பதால் சட்டையை அணியுமாறு கூறினேன் என பதில் அளித்தார்.
அதற்கு விஜய் சேதுபதி உங்கள் கண்ணுக்கு FJ தெரியவில்லையா. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உங்கள் யாருக்கும் அது தெரியவில்லையா என்று கேட்கிறார்.
மேலும் இது குறித்து கனியிடம் கேட்டபோது, கனி என் கருத்தை தான் முன் வைத்தேன் என கூறினார், அதற்கு விஜய் சேதுபதி உங்களுடைய கருத்து ஏன் ஒருத்தர் கிட்ட மட்டும் இருக்கிறது என்கிறார். மேலும் கனி கருத்திற்கு திவாகர் FJ குறித்து பேசியதற்கு விஜய் சேதுபதி எதிர்வினையாற்றுவதும் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் ஒருவழியா விஜய் சேதுபதி எல்லாரையும் கேள்வி கேட்டுட்டார், அன்பு கேங்கை வறுத்துட்டார் என தங்கள் உற்சாகத்தை வெளிக்காட்டினாலும் மறுபுறம் விஜய் சேதுபதி மீதும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. சட்டை இல்லாம இருக்குறதும், யூனிபார்மை கழட்டிட்டு ரீல்ஸ் பண்ணுறதும் ஒண்ணா என ஒரு சாரர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது ஒரு புறம் இருக்கு பிக் பாஸ் தொகுப்பாளராக விஜய் சேதுபதி தொடர மாட்டார், வேறு ஒரு நபர் தொகுத்து வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news